உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சைவ சமயத்தின் விண்வெளி காஷ்மீர் ஆய்வு சொற்பொழிவு

சைவ சமயத்தின் விண்வெளி காஷ்மீர் ஆய்வு சொற்பொழிவு

சென்னை,காஷ்மீரின் பெருமைகளை விளக்கும் 99வது விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 'காஷ்மீர் சைவிசத்தில் உள்ள விண்வெளி ஆய்வு' என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு சனிக்கிழமை இரவு நடக்க உள்ளது.காஞ்சி மடத்தின் சார்பில், 14 நாட்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி, மாத்யம தர்ம சமாஜத்தின், 'யு- டியூப்' சேனலில் நேரலையாக ஒளிபரப்பாகிறது.அதன்படி, வரும் சனிக்கிழமை இரவு 7:00 மணிக்கு, 99வது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. காஷ்மீரில் சைவ சமயம் எனும் கருத்தை கொண்டு, 'காஷ்மீர் சைவிசத்தில் விண்வெளி ஆய்வு' என்ற தலைப்பில் சைமா லேப்ஸ் நிறுவனரும், ஆராய்ச்சியாளருமான டாக்டர் கார்த்திக் ரமேஷ் சிறப்பு சொற்பொழிவாற்ற உள்ளார்.இந்நிகழ்ச்சிகளை நேரலையில் பார்க்க முடியாதவர்கள், மாத்யம தர்ம சமாஜத்தின், https://www.youtube.com/channel/UC---cWDkmwuK1iuL2nkED 5bcA மற்றும் காமகோடி 'டிவி' காஞ்சி காமகோடி முகநுால், காஞ்சி காமகோடி,'யு -டியூப்' காஞ்சி மடத்தின், 'எக்ஸ்' தளத்தின் வாயிலாகவும் பார்க்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை