சிறுவனை துரத்திய நாய்களால் பரபரப்பு
ஆலந்துார், சிறுவனை கடிக்க துரத்திய நாய்களால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலந்துார், மாதவபுரம் தெற்கு பகுதியில், 20க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. அந்த பகுதியில் தெரு நாய்களுக்கு பெண் ஒருவர் உணவளித்து வருவதால், தெரு நாய்கள் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாதவபுரத்தில் சிறுவன் நடந்து செல்லும்போது, ஐந்துக்கும் மேற்பட்ட நாய்கள் துரத்தி சென்றுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.