உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 4 வயது சிறுமிக்கு தொல்லை தந்த முதியவர் கைது

4 வயது சிறுமிக்கு தொல்லை தந்த முதியவர் கைது

திருமங்கலம், அண்ணா நகர் காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது பெண்ணுக்கு, 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.நேற்று முன்தினம் மாலை, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. பெற்றோர், சிறுமியை தேடிச்சென்றபோது ஓரிடத்தில் நின்று அழுது கொண்டிருந்தது.விசாரித்ததில், வீட்டருகே வசிக்கும் ரமேஷ், 52, என்பவர், குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது.பெற்றோர் புகாரின்படி வழக்கு பதிந்த திருமங்கலம் மகளிர் போலீசார், முதியவரை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை