உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்னணு முறை சந்தைப்படுத்தல் சென்னையில் பயிற்சி

மின்னணு முறை சந்தைப்படுத்தல் சென்னையில் பயிற்சி

சென்னை, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், சென்னையில் நாளை முதல் 9ம் தேதி வரை, மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது.தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, பயிற்சி வகுப்பு நடக்கும். இணையதளம் உருவாக்குதல், சமூக ஊடகம் வழியே சந்தைப்படுத்தல் உட்பட பல்வேறு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அரசு சான்றிதழ் வழங்கப்படும்.இப்பயிற்சி குறித்த கூடுதல் விபரங்களைப்பெற, www.editn.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். மேலும் விபரங்களுக்கு, 044 - 2225 2081, 2225 2082, 86681 02600, 86681 00181, 70101 43022 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். முன்பதிவு அவசியம். அரசின் செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை