உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இலவச பயண திட்டம் சொகுசு பஸ்களிலும் விரிவாக்கம்?

இலவச பயண திட்டம் சொகுசு பஸ்களிலும் விரிவாக்கம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:சொகுசு பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணியரை கணக்கெடுக்கும் பணியை, மாநகர போக்குவரத்துக் கழகம் துவங்கி உள்ளது. இதனால், பெண் பயணியருக்கான இலவச பயண திட்டம், சொகுசு பேருந்துகளிலும் கொண்டு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.தமிழகத்தில் 2021 மே 7ம் தேதி, சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்று, முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றார். பதவியேற்றவுடன் அவர், ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.இதில், 'நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்' என்ற திட்டமும் இடம்பெற்று இருந்தது. இந்த திட்டம், மே 8ம் தேதி முதலே நடைமுறைக்கு வந்தது.அதன்படி, அரசு போக்குவரத்துக் கழகங்களில் இயக்கப்படும் 9,000 நகர பேருந்துகளில் 7,300க்கும் மேற்பட்ட சாதாரண கட்டண பேருந்துகளில், இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.சென்னையில் 1,559 சாதாரண கட்டண பேருந்துகளில், பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். நகர்ப்புறங்களில், வெள்ளை போர்டு உடைய பேருந்துகளிலும், கிராமப்புறங்களில் நகரப் பேருந்துகளிலும், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.பெண்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், இத்திட்டத்தை எவ்வித தொய்வுமின்றி செயல்படுத்த, அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.மாநிலம் முழுதும், தினமும் சராசரியாக, 49 லட்சம் பெண்கள் பயணம் செய்து வருகின்றனர். இதனால், அரசு பேருந்துகளில் பெண் பயணியரின் எண்ணிக்கையும், 62 சதவீதமாக உயர்ந்துள்ளது.இந்த திட்டத்தை மேம்படுத்த, மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, சொகுசு பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணியரை கணக்கெடுக்கும் பணியை, மாநகர போக்குவரத்துக் கழகம், நடத்துனர்கள் வாயிலாக துவங்கி உள்ளது.பிராட்வே - தாம்பரம், கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம், திருவான்மியூர், கேளம்பாக்கம், திருவொற்றியூர், பூந்தமல்லி, சோழிங்கநல்லுார் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில், மாநகர சொகுசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.குறிப்பாக, எந்தெந்த நிறுத்தங்களில் எத்தனை பெண்கள் பயணம் செய்கின்றனர் என்பது குறித்து, தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.இதனால், சொகுசு பேருந்துகளிலும் பெண்கள் இலவச பயண திட்டம் விரிவுபடுத்தப்படலாம் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

சாதாரண கட்டண பேருந்துகளில், பெண்களுக்கான இலவச பயண திட்டம், வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த திட்டத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்த, நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.மாநகர போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும் 3,200 பேருந்துகளில், 50 சதவீத பேருந்துகள், தற்போது சாதாரண கட்டண பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகின்றன.இருப்பினும், சில வழித்தடங்களில் செல்லும் சொகுசு பேருந்துகளில், பெண் பயணியர் எண்ணிக்கை எவ்வளவு இருக்கிறது? ஏன் அவர்கள் சொகுசு பேருந்துகளில் செல்ல விரும்புகின்றனர்? கூட்ட நெரிசல் காரணமா? உள்ளிட்டவற்றை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.அடுத்த சில வாரங்களுக்கு, இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன் பிறகே இந்த திட்டத்தை சொகுசு பேருந்துகளிலும் விரிவுபடுத்தலாமா? அல்லது சாதாரண கட்டண பேருந்துகளை கூடுதலாக இயக்கலாமா? என்பதை இறுதி செய்து, பேருந்து இயக்கத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

panneer selvam
மே 03, 2024 13:53

It is a curse in Tamilnadu due to Dravidian Parties , Freebie culture is highly dominating Already transport corporations are in serious financial problem They are struggling to pay even for Diesel No one is thinking about tomorrow and everyone is keen to get free


sankar
மே 02, 2024 17:30

எல்லாரையும் கரப்ட் ஆக்கும் வேலை என்பது மிகவும் தெளிவு -


Rengaraj
மே 02, 2024 16:14

படிப்பறிவற்ற, குறைந்த பட்ச முதலீட்டில் வியாபாரம் செய்பவர்கள் பலர் உள்ளனர் ரோட்டில் இட்லிக்கடை போடுபவர்கள், பணியாரம் விற்பவர்கள், தெருவில் அமர்ந்து காய்கறி விற்பவர்கள், தள்ளுவண்டியில் காய் மற்றும் பழம் விற்பவர்கள், பூ கட்டி விற்பவர்கள், கரும்பு ஜூஸ் , ரோட்டோர டீக்கடைகள், பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் இப்படி நிறையபேரை சொல்லலாம் அவர்களை ஒப்பிடுகையில் ஆட்டோக்காரர்கள் உடல் உழைப்பில் சொகுசான வாழ்க்கை வாழ்பவர்கள்தான் இரவு பத்துமணிக்கு மேல் ஆட்டோவில் ரெண்டு கிலோமீட்டர் செல்ல அதற்கு நூறு ருபாய் வாடகை கேட்பவர்கள் அப்பாவிகளா ? ஸ்டாண்ட் ஆட்டோக்காரர்கள் வேலையில்லாமல் சும்மாதான் இருப்பார்கள் ஆனால் அதிகவாடகை கிடைக்கவேண்டும் என்பதற்காக மத்த ஷேர் ஆட்டோக்காரர்கள் அங்கு மற்றப்பயணிகளை ஏற்றவிடமாட்டார்கள் சென்னை கிளாம்பாக்கம் வந்தாலும் வந்தது இவர்கள் சொல்வதுதான் வாடகை அனைத்து முக்கிய இடங்களிலும் சிண்டிகேட் வைத்துக்கொண்டு பயணிகளை ஏமாற்றுவதுதான் இவர்கள் லட்சியம் எங்கே தங்களது வருமானம் பாதிக்கப்பட்டுவிடுமோ என்பதற்காக கம்யூனிஸ்ட் யூனியன்காரர்களின் உதவியோடு உள்ளூரில் தனியார் பஸ்களை வரவிடாமல் செயல்படுகிறார்கள்


somasundaram alagiasundaram
மே 02, 2024 15:46

போக்குவரத்து துறையை லாப நோக்கில் கொண்டு வரும் திட்டம் அரசுக்கு இல்லை என்று தெரிகிறது


Richard
மே 02, 2024 13:55

அரசு என்பது ஒரு குறிபிட்ட கூட்டத்திற்க்கு மட்டும் இலவசம் உதவி செய்வதற்காக அல்ல அனைத்து மக்களும் பயன்பெற வேண்டும் யாரும் அந்த திட்டத்தால் நலிவடைய கூடாது பெரும்பாலும் படிப்பறிவில்லாத குறைந்த முதலீட்டில் தொழில் செய்கிற ஷேர் ஆட்டோகாரர்களை மனதில் நினைக்கவில்லை அவர்களும் இவர்களின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள் என்பதை மறந்தது ஏன்


sugumar s
மே 02, 2024 12:52

For them to give free to women, they will collect from men and compensate it is atrocious We call men and women same then why disparity for women no women is asking this as they earn few bucks they are keeping quite


Ramesh Sargam
மே 02, 2024 12:37

ஒருபக்கம் இப்படி இலவசங்களை விரிவாக்கம் செய்துவிட்டு ஓட்டுக்காக, மறுபக்கம் அதை ஈடுகட்ட பொருட்களின் விலையை விலையேற்றம் செய்வதுதான் திருட்டு திமுகவின் மாடல்


sridhar
மே 02, 2024 12:37

இலவசங்கள் பொருளாதாரத்தை நாசமாக்கும்


ponssasi
மே 02, 2024 12:21

கிளாம்பாக்கம் பேருந்து நிறுத்தம் செல்லும் பேருந்துகளில் லக்கேஜ் ஸ்டாண்ட் ஏற்பாடு செய்யுங்கள்


Mohan
மே 02, 2024 12:10

விடியலுக்கு இப்போவே பயம் தொத்திருச்சுல இத வெச்சுதான் ஜெயிக்கணும் எப்டியோ இதுல விட்டு வேற எத்தனையோ இருக்கு அதுல பலமடங்கு அல்லீரலாம் அது எங்க நம்ம மூடர் மக்களுக்கு தெரியவப்போகுது எப்டியோ டுமிழ்நாட்டை சுடுகாடு ஆக்காம விடமாட்டாரு இதுவே INDI கூட்டணி ஜெயித்தால் ரயில் ல கூட பெண்களுக்கு இலவசம்னு அறிவிச்சாலும் அறிவிப்பாங்க விளங்குமா


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை