உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிப்., 18ல் ஹிந்து குடும்ப சங்கமம்

பிப்., 18ல் ஹிந்து குடும்ப சங்கமம்

சென்னை,'விவேக பாரதி' அமைப்பின் சார்பில், தி.நகரில் வரும் பிப்ரவரி 18ல், ஹிந்து குடும்ப சங்கமம் நடக்கவுள்ளது.இது தொடர்பாக 'விவேக பாரதி' அமைப்பின் நிறுவனர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் நேற்று வெளியிட்ட அறிக்கை:'விவேக பாரதி' அமைப்பின் சார்பில், சென்னை தி.நகர், பசுல்லா சாலையில் உள்ள ஆர்.கே.எம்., சாலையில் உள்ள, இன்போசிஸ் அரங்கில், பிப்ரவரி 18ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 முதல் மாலை 5.30 மணி வரை ஹிந்து குடும்ப சங்கமம் நடக்கவுள்ளது. குழந்தைகள், பெரியோர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படவுள்ளன.இந்நிகழ்ச்சியில், குடும்பத்துடன் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். பங்கேற்கும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும். பங்கேற்க விரும்பும் குடும்பத்தினர், 98840 81969 என்ற மொபைல் போன் எண்ணில் குறுஞ்செய்தி அனுப்பி, முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை