| ADDED : ஜன 30, 2024 12:37 AM
சென்னை, கனரா வங்கியின் சென்னை வட்ட அலுவலகம் சார்பில், வட்ட முதன்மை பொது மேலாளர் நாயர் அஜித் கிருஷ்ணன் தலைமையில், தி.நகர், விஜயா மஹாலில் வீட்டுக்கடன் திருவிழா துவங்கியுள்ளது. அதில், 50க்கும் மேற்பட்ட பிரபல கட்டட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்நிகழ்ச்சியை, வங்கி இயக்குனர் நளினி பத்மநாபன் துவக்கிவைத்தார்.இதன் வாயிலாக, வீட்டு கடனை உடனே பெற விரும்பும் மக்களுக்கு, கட்டட நிறுவனங்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் குடியிருப்பு திட்டங்கள் மற்றும் கனரா வங்கியின் சுலப வீட்டுக்கடன் திட்டங்கள் பற்றி அறியலாம்.கியூ.ஆர்., குறியீடு வாயிலாக சிறப்பு கடன் வேண்டுகோள் பதிவு, வங்கியால் கையகப்படுத்தப்பட்ட சொத்துக்களின் விற்பனை விபரம் அளித்தல், வங்கி விதிமுறைப்படி உடனடி கடன் அனுமதி, நிதி மற்றும் கட்டட ஆலோசனை வழங்குதல் உள்ளிட்டவை கண்காட்சியின் சிறப்பு அம்சம்.