உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கும் நிதி எவ்வளவு?: புட்டு புட்டு வைத்த நிர்மலா சீதாராமன்

மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கும் நிதி எவ்வளவு?: புட்டு புட்டு வைத்த நிர்மலா சீதாராமன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' 2014-2023 காலகட்டத்தில் தமிழகத்திடம் இருந்து மத்திய அரசு ரூ.6.23 லட்சம் கோடி வரியாக பெற்றது. பெற்ற வரியை விட கூடுதலாக தமிழகத்திற்கு ரூ.6.69 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளோம்'' என நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.சென்னை மேற்கு மாம்பலத்தில் வங்கிகள் மூலம் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: எந்த விதமான உதவிகளும் தமிழக அரசுக்கு மத்திய அரசு செய்வதில்லை என பரப்புரை இருந்து வருகிறது. ஆனால் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்துள்ளது. தமிழகத்தின் மீது விரோத மனப்பான்மையுடன், நாங்கள் வரி பணத்தை திருப்பி கொடுக்காமல் வைத்து கொள்ளவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ectios0c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

கூடுதலாக நிதி

2014-2023 வரை தமிழகத்திடம் மத்திய அரசு பெற்ற வரி ரூ.6.23 லட்சம் கோடி. தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதி ரூ.6.96 லட்சம் கோடி. தமிழகத்திடம் இருந்து பெற்ற வரியை விட கூடுதலாக நிதி கொடுத்துள்ளோம். தமிழகம், கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலத்திற்கும் மாதம் தோறும் நிதி கொடுத்து வருகிறோம். தமிழகத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு 37 ஆயிரத்து 965 கோடி ரூபாய் கொடுத்துள்ளோம். அதேபோல் பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்காக, 11 ஆயிரத்தி 116 கோடி ரூபாயும், கிராமப்புரத்தில் வீடுகள் கட்டுவதற்காக, 4ஆயிரத்து 836 கோடி ரூபாயும் கொடுத்துள்ளோம்.

முன்கூட்டியே நிதி

மாதம் தோறும் அனைத்து மாநிலங்களுக்கும் போக வேண்டிய பணம் சரியாக போய்விடுகிறது. அதை தவிர, சில மாதங்களில் அடுத்த மாதங்கள் கொடுக்க வேண்டிய பணம் முன்கூட்டியே கொடுக்கப்படுகிறது. தீபாவளிக்கு செலவு இருக்குமே, பொங்கலுக்கு செலவு இருக்குமே என்று முன்கூட்டியே கொடுக்கிறோம்.

ஜிஎஸ்டி வரி

தமிழகத்தில் இருந்து ஜி.எஸ்டி வரியாக 36ஆயிரத்தி 350 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் 37 ஆயிரத்தி 370 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரியை முழுமையாக மாநில அரசுகளுக்கு தான் கொடுத்துள்ளோம். பாகுபாடு இல்லாமல் திட்டம் அனைவருக்கும் கொண்டு செல்லப்படுகிறது. தமிழகத்திற்கு கூடுதலாக நிதி கொடுத்துள்ளோம். வரி தொடர்பாக இன்னும் கேள்வி கேட்டாலும் பதில் அளிக்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

பெண் கேள்வி; நிர்மலா சீதாராமன் பதில்

நிர்மலா சீதாராமன் பேசி முடித்த பின், பெண் ஒருவர் தனக்கு நிவாரண நிதி கிடைக்கவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு,''கிடைக்கும். உங்கள் விபரங்களை தெரிவியுங்கள். உங்கள் கஷ்டம் தெரிகிறது. உங்கள் விபரத்தை கொடுங்க, எதற்கு நிதி வரவில்லை என பார்ப்போம் என பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Rajarajan
ஜன 05, 2024 07:06

சமீபத்திய வாட்ஸப் செய்தி. தமிழக அரசின் மொத்த வருவாயில், 92% அரசு ஊழியருக்கு சம்பளம் மற்றும் சலுகையாக சென்றுவிடுகிறது. எனவே மென்மேலும் தமிழக அரசு கடன் வாங்குகிறது. சமீபத்தில் கூட 38,000 கோடி கடன் பத்திரம் மூலம் நிதி திரட்ட போவதாக தகவல். ஒரு குறிப்பிட்ட தேவையின் பணத்தை கூட, தமிழக அரசின் கஜானாவிற்கு திருப்ப உத்தரவிட்டுள்ளதாக தகவல். இனி அடுத்த நிதியாண்டுக்கான, அரசு ஊழியரின் சம்பளம், சலுகை, போனஸ், பென்ஷன் மற்றும் இலவசங்கள் போன்றவற்றிற்கு மென்மேலும் வருமானம் தமிழக அரசுக்கு தேவை. தலைக்கு மேல் வெள்ளம் செல்கிறது. இதில் மத்திய அரசை குறை சொல்லி பயன் இல்லை. தமிழக அரசிற்கு எவ்வளவு வருமானம் வந்தாலும், அது அரசு ஊழியருக்கும், அரசியல்வாதிகளுக்கும் தான் பயன் உள்ளதாக அமையும். இலவசம் கொடுப்பது கூட வெறும் நாடகமே. சின்ன மீனை போட்டு, பெரிய மீனை எடுக்கவே. இவற்றைப்பற்றி பொதுவெளியில், தமிழக நிதிஅமைச்சருடன் தமிழ் ஊடகங்கள் நேர்காணல் நடத்த வேண்டும். அல்லது, தமிழக அரசு நிதிநிலை பற்றி ஒரு வெள்ளையறிக்கை உடனே வெளியிட வேண்டும். அவசியம் மற்றும் அவசரம்.


Matt P
ஜன 05, 2024 07:04

தமிழகத்தின் மீது விரோத மனப்பான்மையுடன், நாங்கள் வரி பணத்தை திருப்பி கொடுக்காமல் வைத்து கொள்ளவில்லை என்கிறார்கள். நிரம்லா இந்த லக்ஷணத்தில் மாநில சுயாட்சி கிடைச்சியோ தனி நாடோ கிடைச்சிதுன்னா தமிழ்நாட்டு அரசு எங்கே போய் பிச்சை எடுப்பாங்க.? அவசர தேவைக்கு இந்த வாய்க்கு நாட்டும் குறைச்சல் இல்லை திராவிட மாடல் கழங்கங்களுக்கு அப்புறம் சோமாலியஆ , ஆப்கான் வங்காளதேஷ் வரிசையில் தமிழ்நாடு என்று ஆகிவிடாதா?


Ramesh Sargam
ஜன 05, 2024 00:51

"உங்கள் அப்பன் வீட்டு பணமா" என்று ஒரு முட்டாள் கேள்வி கேட்டானே. அவனுக்கு இந்த கணக்கை தெரியப்படுத்தவும். தெரியப்படுத்தினால் அந்த தத்திக்கு புரியாது. தெளிவாக எடுத்து கூறவும். (அப்பவும் அந்த தத்திக்கு புரியாது.)


sankaranarayanan
ஜன 04, 2024 21:18

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழ் நாட்டிற்க்கு அளித்த நிதி உதவியை புட்டு புட்டு தெள்ளத்தெளிவாக அக்குவேறு ஆணிவேறாக புள்ளி விவரங்களுடன் அளித்திருக்கிறார் அதற்கு ஏதாவது ஆட்சபனை இந்த மாநில அரசு கொடுக்குமா அல்லது ...வாயை மூடிக்கொண்டு பேசாமலேயே இருந்து விடுமா?


N. Srinivasan
ஜன 04, 2024 20:35

நல்ல நேரத்தில் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வந்தது. இல்லாவிடில் ஒவ்வொரு மாநிலமும் அவர்களின் இலவசங்களுக்கு ஆகும் செலவை ஈடுகட்ட அவர்களே வரியை உயர்த்திக்கொள்ளுவார்கள்


தாமரை மலர்கிறது
ஜன 04, 2024 20:33

காங்கிரஸ் ஆண்டபோது கொடுத்தநிதியை விட மூன்று மடங்கு அதிக நிதியை மத்தியஅரசு ஒதுக்குகிறது. இருந்தாலும் திமுக பொய் பிரச்சாரம் செய்கிறது. அதனால் மத்திய அரசு பத்து பைசா கூட இதற்கு மேலும் கொடுக்க கூடாது. கொடுத்தால் திமுகக்காரர்கள் சுருட்டிக்கொள்வார்கள். முடிந்தால் கொடுக்கும் நிதியில் பத்து சதவீதத்தை குறையுங்கள். ஊழலும் பத்து சதவீதம் குறையும்.


Mohan
ஜன 04, 2024 20:32

எதற்கு ஐயா , ஐக்கிய அரபு நாட்டில் வேலை பார்க்கும் நபர் இந்தளவு திமுக விற்கு வரிஞ்சு கட்றீங்க? அங்க உக்காந்துட்டு தமிழ்நாட்டு நடப்புகளை திராவிட கருப்பு கண்ணாடி போட்டுகிட்டு எகுற்றீங்க. பேட்டி குடுக்கலைன்னாலும் திட்டுறீங்க, பேட்டி குடுத்து விவரம் சொன்னாலும் நொட்டை சொல்றீங்க. அப்படி அவ்வளவு வபரம் தெரிஞ்ச ஆசாமின்னா, ஐக்கிய அரபு நாடுகள்ள வெலை செய்யுறதை தூக்கிப் போட்டு இந்தியா வாங்க. கட்சி தலைவரைப்பார்த்து கட்சியின் முழு நேர ஊழியனா வேலை பாருங்க . அத வுட்டுட்டு சொம்மா எல்லா செய்திக்கும் நொள்ளை கருத்தை ஒன் சைடா எழுதறது. சே அரபு நாட்டு சேக்குகள் போல ஆணாதிக்க மனப்பான்மை வளத்துக்கிட்டீங்கன்னா இப்படி ஓரு பெண் , அதுவும் தமிழில் அத்தாரிட்டேடிவ்வா பேசறதை கேக்கவே புடிக்காது என்பது தெளிவாக தெரிகிறது. ஓப்பன் மைன்டடாக இருக்க பழகுங்க


Dineshkumar Sahadevan
ஜன 04, 2024 19:47

கடன் கொடுப்பது நிதி அல்ல. ரோடு போடுவது உட்பட பல பணிகளுக்கு உலக அளவில் நிதி வாங்கியத்தையும் கணக்கில் சேர்க்க கூடாது.


kumar c
ஜன 04, 2024 20:47

அண்ணே உன் பிரச்சனைதான் என்ன ? கேள்வி : தமிழ் நாட்டுக்கு தரல்ல ? பதில் : இத்தனை வகைகளில் தந்திருக்கு . (கடன் வாங்கி தரக்கூடாதுனு சொல்லுங்க . இவ்வளவு தந்தும் ரோட்டுல நீச்சல் அடிக்குறோம் ). GST எல்லா மாநிலத்துக்கும் பொதுவானது. தமிழ்நாடுக்குனு தனியா குறைக்கவோ கூடவோ முடியாது . இதுக்குத்தான் பாயில பாய்வேனு ஒரு பழமொழி சொலிச்சே . அப்ப T . V ய அணைச்சுடியா எம்ப்பா இன்னுமா தமிழன் முட்டாளுனு நெனைக்கிரே .


ramani
ஜன 04, 2024 19:24

மேடம் நீங்க அளவாவே நிதியை தாங்க. ஏனென்றால் நிதி சரியாக மக்களுக்கு போய் சேருமா என்று சந்தேகமே


ராமகிருஷ்ணன்
ஜன 04, 2024 19:20

விண்வெளியில் உள்ள மிக பெரிய கருந்துளை, பெரிய பெரிய, நெபுலா, கிரகங்களை உறிஞ்சி அழிப்பது போல, திமுகவினருக்கு எவ்வளவு கொடுத்தாலும் சுருட்டி முழுங்கி ஏப்பம் விடுவது வாடிக்கை. கொஞ்ச நாளைக்கு மத்திய அரசு பணம் தரவில்லை என்று சொல்ல மாட்டாங்க.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை