உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோயம்பேடில் வழிப்பறி திருடனுக்கு தர்ம அடி

கோயம்பேடில் வழிப்பறி திருடனுக்கு தர்ம அடி

கோயம்பேடு, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ், 24. இவர், கோயம்பேடு காய்கறி அங்காடிக்கு, நேற்று முன்தினம் இரவு கருவேப்பிலை, கொத்தமல்லி கட்டுகளை சரக்கு வேனில் ஏற்றி வந்தார். பின், உணவு தானிய மார்க்கெட் பகுதியில் வேனை நிறுத்தி, 'பார்க்கிங்' பகுதியில் துாங்கினார்.நேற்று அதிகாலையில் துாங்கி கொண்டிருந்த சதீஷை மர்ம நபர் ஒருவர் எழுப்பி, கழுத்தில் கத்தி வைத்து பணம், மொபைல் போன் ஆகியவற்றை பறிக்க முயற்சித்தார்.சதீஷின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு துாங்கிக்கொண்டிருந்த மற்ற சரக்கு வாகன ஓட்டுனர்கள் ஓடிவந்து, மர்ம நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து, கோயம்பேடு போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில், அம்பத்துார், இந்திரா நகரைச் சேர்ந்த கிருஷ்ணராஜ், 22, என்பதும், இரவு வேளையில் கோயம்பேடு பகுதியில் துாங்குவோரிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்து வந்ததும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை