உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னையில் 26ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்

சென்னையில் 26ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்

சென்னை, சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வரும் 26ம் தேதி, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.மயிலாப்பூர் ராணி மேரி கல்லுாரியில் நடக்க உள்ள இந்த முகாமில் பங்கேற்று, தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கவுள்ளார்.முகாம் ஏற்பாடுகள் குறித்து, ராணிமேரி கல்லுாரியில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. அமைச்சர் கணேசன் தலைமை வகித்தார்.முகாமில், 250க்கும் மேற்பட்ட வேலை அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று, 20,000த்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு, ஆட்களை தேர்வு செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.கூட்டத்தில், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் சுந்தரவல்லி, சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி