| ADDED : டிச 06, 2025 05:02 AM
சென்னை: சென்னையில் நடந்த ஹெச்.சி.எல்., ஸ்குவாஷ் தொடர், இறுதிப்போட்டியில் பிரபல இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா அதிர்ச்சி தோல்வியடைந்தார். இந்திய ஸ்குவாஷ் ராக்கெட் கூட்டமைப்பு மற்றும் ஹெச்.சி.எல்., நிறுவனம் இணைந்து, சர்வதேச ஸ்குவாஷ் தொடர் கீழ்ப்பாக்கம் ஸ்குவாஷ் அரங்கில் ஐந்து நாட்கள் நடத்தின. இதில் இந்தியா, எகிப்து, இலங்கை, மலேஷியா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட 11 நாடு களைச் சேர்ந்த வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். சென்னை வீரர் இதில், நேற்று நடந்த பெண்களுக்கான இறுதிப் போட்டியில், இந்தியாவின் பிரபல வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, 39, - அனாஹத் சிங், 17, மோதினர். விறுவிறுப்பான ஆட்டத்தில், 3 - 2 என்ற செட் கணக்கில் அனாஹத் சிங் வெற்றி பெற்று சாதனை படைத்தார். ஆண்களுக்கான போட்டி யில், சென்னையின் வேலவன் செந்தில் குமார், 27, மற்றும் எகிப்தின் ஆடம் ஹாவால், 17, எதிர்கொண்டனர். அதில் 3 - 1 என்ற கணக் கில் வேலவன் செந்தில்குமார் வெற்றி பெற்று முதலிடத்தை தட்டிச் சென்றார்.