உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாதவரத்தில் வாலிபருக்கு குண்டாஸ் 

மாதவரத்தில் வாலிபருக்கு குண்டாஸ் 

மாதவரம், மாதவரம் பகுதியில், வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர், குண்டர் சட்டத்தின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சீனு, 30, என்பவர், கடந்த ஜன, 1ம் தேதி, மாதவரம், ரவுண்டானா அருகே நடந்து வந்தபோது, அவரை வழிமறிந்த நபர், கத்தியால் வெட்டி, பணம் கேட்டு மிரட்டினார்.இச்சம்பவம் குறித்து சீனு அளித்த புகாரின்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், புழல், காவாங்கரை பகுதியை சேர்ந்தவர் தனசேகரன், 27 என்பவரை கைது செய்தனர்.விசாரணையில், தனசேகர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து, தனசேகரை குண்டர் சட்டத்தின்படி சிறையில் அடைக்க, கொளத்தூர் துணை ஆணையாளர் சக்திவேல் சிபாரிசு செய்தார். இதையடுத்து, மாதவரம் நீதிமன்றம், தனசேகருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை அளித்து தீர்ப்பு அளித்ததால், அவர் புழல் தண்டனை சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை