உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ஹெல்மெட்டால் மாணவரை தாக்கி செயின் பறித்தோர் கைது

 ஹெல்மெட்டால் மாணவரை தாக்கி செயின் பறித்தோர் கைது

பாண்டிபஜார்: 'ஹெல்மெட்'டால் மாணவரை தாக்கி, செயின் பறித்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். திருவல்லிக்கேணி, நடேசன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரிஷி கார்த்திக், 18; கல்லுாரி மாணவர். கடந்த 17ம் தேதி இரவு தி.நகர், திருமலைப்பிள்ளை சாலையில் நின்று நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மூன்று வாலிபர்கள் ரிஷிகார்த்திக்கிடம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் மறுக்கவே, ஹெல்மெட்டால் சரமாரியாக தாக்கி, அவரது 1.5 சவரன் செயினை பறித்து சென்றனர். இது குறித்து பாண்டிபஜார் போலீசார் விசாரித்தனர். இதில், அயனாவரத்தைச் சேர்ந்த தனுஷ், 23, ஜோசப், 19, ஷாம், 21, ஆகியோர், மாணவரை தாக்கி செயின் பறித்தது தெரிய வந்தது. இதையடுத்து, மூன்று பேரையும் போலீசார், நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 1.5 சவரன் செயின், 3 மொபைல் போன்கள் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டன. இதில், தனுஷ் மீது ஏற்கனவே ஒரு வழக்கு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை