உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சென்ட்ரல் - ஏர்போர்ட் இடையே மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

 சென்ட்ரல் - ஏர்போர்ட் இடையே மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

சென்னை: தொழில்நுட்ப கோளாறால், சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை, நேற்று கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆலந்துார் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் வழித்தடத்தில், நேற்று காலை 6:00 மணிக்கு, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் நேரடி மெட்ரோ ரயில் சேவை, கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக, விமான நிலையம் பயணம் மேற்கொள்ள முடியாமல், பயணியர் தவித்தனர். அவர்கள் அனைவரும், ஆலந்துாரில் இறங்கி, நீலவழித்தடத்தில் இயக்கப்படும் விம்கோ நகர் - விமான நிலையம் ரயில் தடத்தில் பயணம் மேற்கொண்டனர். இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பச்சை வழித்தடத்தில், சென்ட்ரல் - விமான நிலைய நேரடி ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதை சரி செய்யும் பணிகள் நடக்கின்றன. பச்சை வழித்தடத்தில், சென்ட்ரல் - பரங்கிமலை சேவையில் எந்தவித பாதிப்பும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ