உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எம்.ஆர்.எப்., டி - 20 கிரிக்கெட் ராமச்சந்திரா பள்ளி அதிரடி வெற்றி

எம்.ஆர்.எப்., டி - 20 கிரிக்கெட் ராமச்சந்திரா பள்ளி அதிரடி வெற்றி

சென்னை:எம்.ஆர்.எம்., டி - 20 கிரிக்கெட் போட்டியில், ராமச்சந்திரா பள்ளி அணி, எட்டு விக்கெட் வித்தியாசத்தில், டி.ஏ.டி., பள்ளியை தோற்கடித்தது.எம்.சி.சி., பள்ளி மற்றும் எம்.ஆர்.எப்., நிறுவனம் சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, சேத்துப்பட்டில் நடக்கிறது.இதில், பி.எஸ்.பி.பி., நெல்லை நாடார், சர் முத்தா, டி.ஏ.வி., - டான்போஸ்கோ உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன. அணிகள், இரு பிரிவாக பிரிக்கப்பட்டு, 'நாக் அவுட' முறையில் மோதுகின்றன.நேற்று காலை நடந்த போட்டி ஒன்றில், 'டாஸ்' வென்ற டி.ஏ.டி., பள்ளி அணி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர்கள் சீராக ஆடியிருந்தாலும், ராமச்சந்திரா பப்ளிக் பள்ளி அணி வீரர்களின் பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால், 20 ஓவர்களை நிறைவு செய்யும் வரை, டி.ஏ.டி., அணி எட்டு விக்கெட்டுகள் இழந்து 118 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.அடுத்ததாக களமிறங்கிய ராமச்சந்திரா பள்ளி அணி, துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.பந்து வீச்சாளர்களை திணறடித்த அவர்கள், வெறும் எட்டு ஓவர்களில் இரு விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களை குவித்து வெற்றியை தக்க வைத்துக்கொண்டனர்.இதன் மூலம் ராமச்சந்திரா பப்ளிக் பள்ளி அணி, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை