உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேசிய பூப்பந்தாட்ட போட்டி தமிழகம் சாம்பியன்

தேசிய பூப்பந்தாட்ட போட்டி தமிழகம் சாம்பியன்

திருவொற்றியூர் :தென்மண்டல தேசிய பூப்பந்தாட்ட போட்டியில், தமிழக ஆண்கள் அணி 'சாம்பியன்' பட்டம் வென்றது.மாநில பூப்பந்தாட்ட கழகம் மற்றும் அகில இந்திய பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன், திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் பூப்பந்தாட்ட கழகம் சார்பில், 43வது தென்மண்டல தேசிய பூப்பந்து போட்டிகள், மூன்று நாட்கள் நடந்தன.இப்போட்டியில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளா உட்பட ஏழு மாநில அணிகளைச் சேர்ந்த, 172 வீரர்கள் பங்கேற்றனர். பகல், இரவு ஆட்டமாக நடைபெற்ற பேட்டிகளில், ஆடவர் மற்றும் மகளிர் அணியில், தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.நேற்று முன்தினம் இரவு இறுதி போட்டிகள் நடைபெற்றன. இதில், ஆடவர் அணியில், தமிழகம், 35 - 32, 35 - 30 என்ற 'செட்' கணக்கில் வெற்றி பெற்று, கர்நாடகா அணியை வீழ்த்தியது.அதே போலவே, பெண்கள் அணியில் கர்நாடகா அணியினர், 35 - 33, 35 - 22 என்ற செட் கணக்கில், தமிழகத்தை வீழ்த்தி வெற்றி பெற்றனர். சாம்பியன் பட்டம் வென்ற தமிழக ஆடவர், கர்நாடக மகளிர் அணிகளுக்கு, தலா 50 ஆயிரம் ரூபாய் மற்றும் சுழற்கோப்பை, சான்றிதழ் உள்ளிட்டவற்றை, அமைச்சர் மெய்யநாதன், எம்.எல்.ஏ., சங்கர், மண்டல குழு தலைவர் தனியரசு உள்ளிட்டோர் வழங்கினர்.இரண்டாமிடம் பிடித்த அணிகளுக்கு, தலா 25 ஆயிரம் ரூபாய், கோப்பை மற்றும் பரிசுகள், மூன்றாமிடம் பிடித்த அணிகளுக்கு, தலா, 15 ஆயிரம் ரூபாய், பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில், வடசென்னை எம்.பி., கலாநிதி, மாதவரம் எம்.எல்.ஏ., சுதர்சனம், தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழக செயலர் எழிலரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ