உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தீர்ப்பாயத்திற்கு ரூ.97 கோடியில் அலுவலகம்

 தீர்ப்பாயத்திற்கு ரூ.97 கோடியில் அலுவலகம்

சென்னை: கட்டடம் மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு, சென்னை அண்ணா நகரில், 97 கோடி ரூபாய் மதிப்பில், புதிய அலுவலகம் திறக்கப்பட்டு உள்ளது. கட்டடம் மற்றும் மனை விற்பனை துறையை ஒழுங்குப்படுத்தும் வகையில், கட்டடம் மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை, தமிழக அரசு அமைத்துள்ளது. இதற்காக, சென்னை அண்ணா நகரில், 19,008 சதுர அடி இடத்தில், 77.6 கோடி ரூ பாயில், 56,000 சதுர அடியில் கட்டப்பட்ட கட்டடம் வாங்கப்பட்டது. அதில், 19.4 கோடி ரூபாய் செலவில், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. இந்த புதிய அலுவலகத்தை, 'வீடியோ கான்பிரன்ஸ்' வாயிலாக, முதல்வர் ஸ்டாலி ன் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், தலைமை செயலர் முருகானந்தம், வீட்டுவசதி துறை செய லர் காகர்லா உஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை