உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விதிமீறி விளம்பர தட்டிகள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

விதிமீறி விளம்பர தட்டிகள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

சென்னை, விபத்துக்கு வழிவகுக்கும் வகையில், விளம்பர பலகை வைக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், சென்னையில் சட்ட விரோதமாக விளம்பரங்கள் வைப்பது அதிகரித்துள்ளது.குறிப்பாக, தெருவிளக்கு கம்பங்களில் விளம்பர தட்டிகள் கட்டுவது தொடர்கிறது. முன்பு, கை எட்டும் துாரத்தில் விளம்பரம் கட்டினர். இதை, மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். தற்போது, ஏணி வாகனம் வைத்து, கைக்கு எட்டாத வகையில் 15 அடி உயரத்தில் கட்டுகின்றனர். இதனால், தெருவிளக்கு பழுதை சீரமைக்க முடியாமல், மாநகராட்சி ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.மேலும், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி, விபத்துக்கு வழி வகுக்கிறது. சட்டவிரோதமாக வைக்கப்பட்ட விளம்பரங்களை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ