உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சென்னை பல்கலை மாணவர் விடுதியை பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவு

 சென்னை பல்கலை மாணவர் விடுதியை பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவு

சென்னை: நம் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, முதல்வர் திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாத சென்னை பல்கலை முதுகலை மாணவர் விடுதியை, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று பார்வை யிட்டார். விடுதியை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை பல்கலை, முதுகலை மாணவர்களின் வசதிக்காக, சென்னை காமராஜர் சாலையில் கட்டப்பட்ட பிரத்யேக மாணவர் விடுதியை, கடந்த மே 20ல், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆனால், மாணவர் விடுதி திறக்கப்பட்டு ஏழு மாதங்களாகியும், இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. விடுதிக்கு தேவையான, தளவாட பொருட்கள் கொள்முதலுக்கான நிதி ஒதுக்க தாமதம் ஏற்பட்டுள்ளதே காரணம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக, நம் நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதையடுத்து, மாணவர் விடுதியை, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று பார்வையிட்டார். விடுதி பயன்பாட்டிற்கு கொண்டுவராததற்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாத அதிகாரிகளை அவர் கண்டித்தார். விரை வில், மாணவர் விடுதியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, மாணவர்களுக்கு அறைகள் ஒதுக்கும்படியும், அ வர் உத்தரவிட்டார். ஆய்வின்போது, உயர்கல்வித்துறை செயலர் சங்கர், சென்னை பல்கலை பதிவாளர் ரீட்டா ஜான் ஆகியோர் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை