உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  விக்டோரியா அரங்கை காண முதல் நாளே திரண்ட மக்கள்

 விக்டோரியா அரங்கை காண முதல் நாளே திரண்ட மக்கள்

சென்னை: ரிப்பன் மாளிகை அருகே புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கை பார்வையிட, பொதுமக்கள் குடும்பத்துடன் நேற்று திரண்டனர். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை அருகே, 32.62 கோடி ரூபாய் செல வில், பழமை மாறாமல் விக்டோரியா அரங்கம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தை, முதல்வர் ஸ்டாலின் இம்மாதம் 23ம் தேதி திறந்து வைத்தார். அரங்கை, பொதுமக்கள் கட்டணமின்றி, https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து, காலை 8:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை பார்வையிடலாம் என, மாநகராட்சி அறிவித்தது. அதன்படி, நேற்று முதல் நாளாக பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். முன்பதிவு செய்தவர்கள் மட்டுமின்றி, முன்பதிவு செய்யாதவர்கள் குடும்பத்துடன் திரண்டனர். முதல் நாள் என்பதால், அனைவரையும் அதிகாரிகள், அரங்கை பார்வையிட அனுமதித்தனர். அரங்கில், சென்னையின் பழமையை நினைவூட்டும் வகையில் கண்காட்சி, விளையாட்டு வரலாறு, டிராம் வண்டி, தொல்லியல் காட்சி, பகிங்ஹாம் கால்வாய் படகு, பழைய ஸ்கூட்டர், ரிக் ஷா, செல்பி பாயின்டுகள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இனி அனுமதிக்கப்படுவர் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை