எம்.ஆர்.பி., செவிலியர்கள் கலெக்டரிடம் மனு
சென்னை, தமிழ்நாடு எம்.ஆர்.பி.,செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை கலெக்டர் அலுவலகத்தின் அருகில், நேற்று மாலை பெருந்திரள் முறையீடு நடத்தினர்.தொடர்ந்து, கோரிக்கை மனுவை, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம் சங்கத்தினர் வழங்கினர்.