உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொங்கல் தொகுப்பு அன்பரசன் துவக்கி வைப்பு

பொங்கல் தொகுப்பு அன்பரசன் துவக்கி வைப்பு

பல்லாவரம், தாம்பரம் மாநகராட்சி, 14வது வார்டு, ராஜாஜி நகர்-1 ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு திட்டத்தை அமைச்சர் அன்பரசன், நேற்று துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், 'பொங்கல் விழாவை, தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த மக்களும் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்ற நோக்கில், 1,000 ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், சட்டசபை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் இத்திட்டத்தை துவக்கி வைத்துள்ளனர்' என்றார்.தி.மு.க., - எம்.பி., - டி.ஆர்.பாலு, எம்.எல்.ஏ., கருணாநிதி, மண்டல தலைவர் ஜோசப் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ