உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொங்கல் பயணியர் கூட்டம் விமான கட்டணங்கள் உயர்வு

பொங்கல் பயணியர் கூட்டம் விமான கட்டணங்கள் உயர்வு

சென்னை,பொங்கல் பண்டிகை காரணமாக, விமான கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளன.சென்னையில் இருந்து, துாத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களில், கடந்த இரண்டு நாட்களாகவே, பயணியர் கூட்டம் அதிகமாக உள்ளது. அதனால், உள்நாட்டு விமானங்களில் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தி வசூலிக்கப்பட்டன. இதுகுறித்து, பயணியர் கூறியதாவது: ரயில்களில் டிக்கெட் கிடைக்காததால், சற்று கூடுதல் கட்டணம் செலுத்தி, விமானங்களில் பயணிக்க வந்தோம். ஆனால், இங்கு பல மடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர். சென்னை போன்ற அதிக மக்கள்தொகை கொண்டுள்ள நகரங்களில் இருந்து, பிற நகரங்களுக்கு செல்ல, சிறப்பு விமானங்களை இயக்க வேண்டும். அதில், நியாயமான கட்டணத்தை நிர்ணயித்தால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:விமானங்களில் பயணிக்க, கட்டணம் ஏதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. தேவையை அடிப்படையாக கொண்டே, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக, மூன்று மாதங்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால், கட்டணம் குறைவாக இருக்கும். கடைசி நேரத்தில் பயணித்தால், கட்டணம் அதிகமாக தான் இருக்கும். இது, பல ஆண்டுகளாக இருக்கும் நடைமுறை. சிறப்பு விமானங்களை உடனடியாக இயக்க முடியாது. இதற்காக, அனுமதி பெறவே குறைந்தது, மூன்று மாதங்கள் ஆகி விடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.வழக்கமான கட்டணம் - உயர்த்தப்பட்ட கட்டணம், ரூபாயில்சென்னை - துாத்துக்குடி - 4,364 - 13,639 சென்னை - மதுரை - 3,367 - 17,262 சென்னை - திருச்சி - 2,264 - 11,369 சென்னை - கோவை - 3,735 - 14,689 சென்னை - சேலம் - 3,965 - 11,329***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ