| ADDED : டிச 31, 2025 05:21 AM
பாரிமுனை: குறவர்களை, பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என, தமிழக அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் முதல்வர்களின் பரிந்துரையின்படி, குறவர் இனத்தை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும். தொழிலை வைத்து, 26 பிரிவினராக உள்ள டி.என்.சி., பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். குறவர்கள் மீது பொய் வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலர் சண்முகம் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.