| ADDED : ஜன 07, 2024 12:31 AM
திருவொற்றியூர் சென்னை, எண்ணுார், பெரியகுப்பத்தில் இயங்கிய, 'கோரமண்டல் இன்டர்நேஷனல்' நிறுவனத்திற்கு, கடலில் இருந்து நிறுவன வளாகத்தில் உள்ள ராட்சத தொட்டிக்கு, அமோனியா இறக்குமதி செய்யும் குழாய் உள்ளது. டிச., 26 ம் தேதி, நள்ளிரவு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே, மிக்ஜாம் புயலின் போது குழாய் உடைப்பு ஏற்பட்டிருந்ததால், 2 டன் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.இதில், பெரியகுப்பம், சின்னகுப்பம், எர்ணாவூர் குப்பம் உள்ளிட்ட, 32 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. வாயு கசிவிற்கு காரணமான நிறுவனத்தை நிரந்தரமாக மூடக்கோரி, எண்ணுார் மக்கள் பாதுகாப்பு குழு என்ற பெயரில், பெரியகுப்பத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று, 11வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. இதனிடையே, வாயு கசிவிற்கு காரணமான கோரமண்டல் நிறுவனத்தை மூடக்கோரி மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்விடம் வடசென்னை எம்.பி., கலாநிதி கோரிக்கை மனு அளித்துள்ளார்.