உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆசனவாயில் கஞ்சா கடத்திய புழல் சிறை கைதி சிக்கினார்

ஆசனவாயில் கஞ்சா கடத்திய புழல் சிறை கைதி சிக்கினார்

புழல்:புழல் மத்திய சிறையில், 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிறை வளாகத்தில் சிறை காவலர்கள் அவ்வப்போது போதை பொருட்கள் நடமாட்டம் குறித்து சோதனை செய்கின்றனர்.இந்நிலையில், குமரன் நகர் காவல் நிலைய போலீசார், வழிப்பறி வழக்கில், கடந்த மே மாதம் டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த கணேஷ், 34, என்பவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.அவரை, விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜர்படுத்திய புழல் போலீசார், பின் புழல் சிறைக்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில், அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த சிறை போலீசார், அவரை சோதனை செய்தனர். இதில், ஆசன வாயில் அவர் எடுத்து வந்த 10 கிராம் கஞ்சா பொட்டலம் சிக்கியது. புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி