உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரவுடிகள் அட்டூழியம்: புளியந்தோப்பில் பீதி

ரவுடிகள் அட்டூழியம்: புளியந்தோப்பில் பீதி

புளியந்தோப்பு,புளியந்தோப்பு, கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கணேஷ், 34; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை, வீட்டிற்கு செல்ல குடியிருப்பின் 'லிப்டில்' ஏறி காத்திருந்தார்.அப்போது, அடையாளம் தெரியாத மர்மநபர்கள் மூவர் மது போதையில், கணேஷிடம் தகராறு செய்து, கத்தியால் தலையில் வெட்டி தப்பினர். கணேஷை உறவினர்கள் மீட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து பேசின்பாலம் போலீசார் விசாரிக்கின்றனர்.கே.பி.பார்க் குடியிருப்பில் கஞ்சா, குட்கா மற்றும் மது விற்பனை, 24 மணி நேரமும் சர்வசாதாரணமாக நடப்பதாக, பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதேபோல, 24 மணி நேரமும் ரவுடிகளின் அட்டகாசமும், அடிக்கடி வெட்டுக்குத்து சம்பவங்களும் நடக்கின்றன. எனவே, ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
பிப் 13, 2024 13:00

ரௌடிகளை எல்லாம் ஒழித்து விட்டோம் என்று சொன்னது எல்லாம் பொய்யா கோப்பால்? (ஒருவேளை "ஒளித்தாக" இருக்குமோ?)


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை