உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திறந்த நிலையில் காட்சி அளிக்கும் மழைநீர் வடிகால்

திறந்த நிலையில் காட்சி அளிக்கும் மழைநீர் வடிகால்

ஆவடி:ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், முதல் செக்டரில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, ஆவடி மகளிர் போலீஸ் நிலையம் அருகே உள்ள மழை நீர் வடிகாலில் பல பகுதிகளில், மூடி இல்லாமல் திறந்து கிடக்கிறது. இதனால், இரவு நேரங்களில் மகளிர் காவல் நிலையம் அருகே காத்திருக்கும் பொதுமக்கள் கால் இடறி வடிகாலில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அதேபோல், அங்கு சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளை கிளறும் கால்நடைகள் மழைநீர் வடிகாலில் விழுந்திடும் சூழல் உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் நடந்த மாமன்ற கூட்டத்தில் பல இடங்களில் வடிகால் மூடி இல்லை என்று புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.எனவே சம்பந்தப்பட்ட ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் திறந்த நிலையில் இருக்கும் வடிகாலை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை