உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்டர்மீடியனில் வைத்திருந்த விளம்பர பலகைகள் அகற்றம்

சென்டர்மீடியனில் வைத்திருந்த விளம்பர பலகைகள் அகற்றம்

அண்ணா நகர், பிரதான சாலையின் மைய தடுப்பில் உள்ள மின்விளக்கு கம்பங்களில், அனுமதியின்றி கட்டப்பட்ட விளம்பர பலகைகளை, மாநகராட்சி அதிரடியாக அகற்றியது.அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அண்ணா நகர், இரண்டாவது பிரதான சாலை உள்ளது. இச்சாலையானது, அண்ணா நகர் ரவுண்டானாவில் துவங்கி, திருமங்கலம் சிக்னல் வரை உள்ளது. சாலையில்,'சென்டர் மீடியன்' எனும் சாலை மைய தடுப்பில், மாநகராட்சி பராமரிப்பில் தெரு விளக்குகள் உள்ளன.இந்த தெரு விளக்கு கம்பங்களில் அனுமதியின்றி, சிறிய அளவிலான விளம்பர பலகைகள் கட்டிப்பட்டிருந்தன. இதுகுறித்து மாநகராட்சிக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, 102வது வார்டிற்கு உட்பட்ட உதவி பொறியாளர் உத்தரவின்படி, சாலை முழுதும் இருந்த விளம்பர பலகைகள் அதிரடியாக அகற்றப்பட்டன.இதுகுறித்து, உதவி பொறியாளர் கூறுகையில்,'பிரதான சாலையில், வாகன ஓட்டிகளை திசை திரும்பும் வகையில், அனுமதியின்றி சாலை முழுதும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.உயரதிகாரிகளின் உத்தரவின்படி, விளம்பர பலகைகளை அகற்றி வருகிறோம். அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பலகைகள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

ராட்சத பேனர்கள்

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பேனர்களை அகற்றிய மாநகராட்சியின் செயலை வரவேற்கிறோம். இதேபோல், சாலையில் நீதிமன்ற உத்தரவை மீறி வைக்கப்படும் ராட்சத பேனர்கள் மற்றும் சுவர் போஸ்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி முன்வர வேண்டும். குறிப்பாக, பல லட்சம் செலவில் வைக்கப்படும், தெரு பெயர் பலகையில், அத்துமீறி ஒட்டும் போஸ்டர்களுக்கும் தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை