உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாய்ந்த நிலையிலுள்ள மரம் வெட்டி அகற்ற கோரிக்கை

சாய்ந்த நிலையிலுள்ள மரம் வெட்டி அகற்ற கோரிக்கை

வில்லிவாக்கம்:அண்ணா நகர் மண்டலம், 95வது வார்டில், வில்லிவாக்கம் பெருமாள் கோவில் தெரு உள்ளது. இங்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாட வீதி தெருக்கள் உள்ளன.இந்த தெரு சந்திப்பில், குடியிருப்புகள் மற்றும் தனியார் மருத்துவமனை, பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன.மாட வீதிகள் தெரு சந்திப்பில், விபத்து ஏற்படுத்தும் வகையில், மரம் ஒன்று சாய்ந்துள்ளது. அது எப்போது வேண்டுமானாலும் முறிந்து கீழே விழுந்து, அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.இதுகுறித்து, வார்டு பொறியாளரிடம் புகார் தெரிவித்தால் அலட்சியம் காட்டுவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், ஆபத்தான நிலையிலுள்ள இந்த மரத்தை வெட்டி அகற்ற வேண்டும் என, கோரிக்கை வலுத்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை