உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புதைவட கேபிள்கள் அமைக்க பகுதி சபை கூட்டத்தில் கோரிக்கை

புதைவட கேபிள்கள் அமைக்க பகுதி சபை கூட்டத்தில் கோரிக்கை

எண்ணுார், எர்ணாவூரில் உள்ள நான்காவது வார்டில், நேற்று காலை பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. இதில், உதவி பொறியாளர் அன்னலட்சுமி, கவுன்சிலர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், மேல்நிலை மின்சார கம்பி இணைப்புகளை, புதைவட கேபிள்களாக மாற்றி தர வேண்டும். ஆதிதிராவிடர் காலனி பகுதிக்கு, மின் இணைப்பு வழங்க மறுக்கப்படுகிறது.அரசு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும். குப்பை சேகரிப்பு பணியில் கவனம் செலுத்த வேண்டும். சொத்துவரி விதிக்க வேண்டும்.விளையாட்டு மைதானத்தை சீரமைத்து, கால்பந்து விளையாட்டு மைதானமாக மாற்றி தர வேண்டும். குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். பொது குழாய்கள் அமைத்து தர வேண்டும்.மேலும், திருவீதியம்மன் நகரில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட வேண்டும். சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. போலீசார் அடிக்கடி ரோந்து வர வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர். இக்கூட்டத்தில், பல துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை