| ADDED : ஜன 05, 2024 01:03 AM
ஆவடி, மணலிபுதுநகர், 74வது தெருவைச் சேர்ந்தவர் வளர்மதி, 30; பா.ஜ., உறுப்பினரான இவர், அம்பத்துாரில் 'பியூட்டி பார்லர்' நடத்தி வந்தார். இவர், பணம் மோசடி தொடர்பாக ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் நேற்று புகார் ஒன்று அளித்தார்.அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:கோயம்பேடைச் சேர்ந்த திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பா.ஜ., முன்னாள் நிர்வாகி பொன் பாஸ்கர் என்பவரிடம், பியூட்டி பார்லருக்கு உரிமம் வாங்கி தரும்படி கேட்டேன்.அவர், போரூரில் பியூட்டி பார்லர் துவங்கினால் நல்ல வருமானம் கிடைக்கும் என்றும், அதன்பின் இரண்டிற்கும் சேர்த்து உரிமம் வாங்கி தருவதாக பணம் கேட்டார். அதன்படி, கடந்த 2022 முதல் சிறுக சிறுக 25 லட்சம் ரூபாயை் பொன் பாஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் கொடுத்தேன். ஆனால், தொடர்ந்து ஏமாற்றி வந்தனர்.அதன்பின், பணத்தை திருப்பி கேட்டபோது, பொன் பாஸ்கரின் கூட்டாளிகள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும்.இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.