உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பட்டா வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி

பட்டா வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி

கொடுங்கையூர்: கொடுங்கையூர், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம், 39. இவர், அதே பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகே, சரத் என்பவர் துணிக்கடை நடத்தி வந்தார். இருவரும் நட்புடன் பழகி வந்த நிலையில், தன் அக்காவின் மாமனார், வருவாய்த்துறையில் பெரிய அலுவலராக உள்ளதாகவும், பட்டா, சிட்டா உள்ளிட்டவற்றை எளிதில் வாங்கித்தருவதாகவும், கல்யாண சுந்தரத்திடம் சரத் கூறியுள்ளார். இதை நம்பிய கல்யாணசுந்தரம், கொரட்டூரில் உள்ள நிலத்திற்கு பட்டா வேண்டும் என, சரத்திடம் கூறியுள்ளார். அப்போது, கலெக்டருக்கு கொடுக்க வேண்டுமென கூறி, கடந்த 2023, ஆக., 21ம் தேதி முதல், சிறுகச்சிறுக 5 லட்சம் ரூபாயை சரத் பெற்றுள்ளார். ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் பட்டா வாங்கி தராமல், சரத் ஏமாற்றி வந்துள்ளார். கல்யாணசுந்தரம் பலமுறை கேட்டதால், 1 லட்சம் ரூபாய் மட்டும், சரத் திருப்பி கொடுத்துவிட்டு, மீதமுள்ள 4 லட்சம் ரூபாயை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து, எழும்பூர் கோர்ட்டில் கல்யாணசுந்தரம் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், வழக்கை பதிவு செய்யும்படி, கொடுங்கையூர் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கொடுங்கையூர் போலீசார், சரத் மீது நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை