உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சேதுபாஸ்கரா மெட்ரிக் பள்ளி 36ம் ஆண்டு விளையாட்டு விழா

சேதுபாஸ்கரா மெட்ரிக் பள்ளி 36ம் ஆண்டு விளையாட்டு விழா

அம்பத்துார், அம்பத்துார் அடுத்த புதுாரில் உள்ள சேதுபாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 36ம் ஆண்டு விளையாட்டு விழா, பள்ளி மைதானத்தில் நடந்தது.இதில், ஓட்டப்பந்தயம், கால்பந்தாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில், 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். அதே போன்று, ஆசிரியர், அனைத்து பிரிவு ஊழியர்கள் மற்றும் பெற்றோருக்கான விளையாட்டு போட்டிகளும் நடந்தன.வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு மலேஷியா நாட்டின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் தான்ஸ்ரீ சுப்ரமணியம் சதாசிவம், கால்பந்தாட்ட வீரர் முகமது அம்ஜத், குத்துச்சண்டை வீரர் மதிவாணன், எழுத்தாளர் டாக்டர் அப்துல் காதர் ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.ஆசிரியர், ஊழியர், பெற்றோருக்கு, பள்ளி தாளாளர் சேதுகுமணன், முதல்வர் செல்வகுமார் ஆகியோர், 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகளை வழங்கி வாழ்த்தினர். முன்னதாக, மாணவ - மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை, சிறப்பு விருந்தினர்கள் ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை