உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெயர்ந்த இணைப்பு சாலை அபாயத்தில் வாகன ஓட்டிகள்

பெயர்ந்த இணைப்பு சாலை அபாயத்தில் வாகன ஓட்டிகள்

திருவொற்றியூர், மணலி, சி.பி.சி.எல். சந்திப்பில் இருந்து, பகிங்ஹாம் கால்வாய் மேம்பாலத்திற்கு செல்லும் சாலையை, தினசரி 1,000த்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர்.திருவொற்றியூர், ஆர்.கே.நகர், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, ராயபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கு இச்சாலையே பிரதானம்.இந்நிலையில், இணைப்பு சாலையின், பழைய எம்.ஜி.ஆர்., நகர் - பெரியார் நகர் சந்திப்பில், தார்ச்சாலை பெயர்ந்து, அலங்கோலமாக காட்சியளிக்கின்றன.இதனால், ஸ்கூட்டர், பைக், ஆட்டோ உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றன. அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை