உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ஓசியில் பிரியாணி தராத கடைகாரருக்கு கத்திக்குத்து

 ஓசியில் பிரியாணி தராத கடைகாரருக்கு கத்திக்குத்து

சென்னை: ஓட்டேரி, அலெக்சாண்டர் தெருவைச் சேர்ந்தவர் நாசர்கான், 48; பெரியமேடு இருசப்பன் தெருவில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். கடந்த, 20ம் தேதி மாலை, பிரியாணி கடைக்கு விக்னேஷ் என்பவர், தன் மூன்று நண்பர்களுடன் வந்து, 'ஓசி'யில் பிரியாணி கேட்டார். கடை உரிமையாளர் தர மறுத்ததால், மறைத்து வைத்திருந்த கத்தியால் நாசர்கானை குத்தி, 2,000 ரூபாயை பறித்துச் சென்றனர். காயமடைந்த நாசர்கான், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பெரியமேடு போலீசார் வழக்கு பதிந்து, தாக்குதலில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், 30, கபில், 29, லோகேஷ், 26 ஆகிய மூவரை நேற்று கைது செய்தனர். மூவரும் பல்வேறு வழக்குகளில் தொடர்புைடைய பழைய குற்றவாளிகள் என, போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை