உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை

தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை

நெற்குன்றம், நெற்குன்றம். ஜெயராம் நகர் நான்காவது தெருவைச் சேர்ந்தவர் பாண்டியராஜன், 32. திருமணமாகாதவர். இவர், தனியார் ஆன்லைன் நிறுவனத்தில் ஓட்டுனராக பணி செய்து வந்தார்.இந்நிலையில், சமீபத்தில் அவரது தாய் இறந்துள்ளார். அன்று முதல் வேலைக்கு செல்லாமல், மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த பாண்டியராஜன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற கோயம்பேடு போலீசார், அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி