உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ஸ்போர்ட்ஸ் கார்னர்

 ஸ்போர்ட்ஸ் கார்னர்

பூந்தமல்லி அரசு பள்ளி மாநில கபடிக்கு தேர்வு பள்ளிக்கல்வித் துறை சார்பில், திருவள்ளூர் மாவட்ட அளவில், அண்மையில் நடந்த கபடி போட்டியில், பூந்தமல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணி பங்கேற்றது. இதில், 17 வயது பிரிவில், பூந்தமல்லி அரசு பள்ளி மாணவர்கள், இறுதி போட்டியில் வெற்றி பெற்று, முதல் பரிசை வென்றனர். திருச்சியில் டிச., 5ல் மாநில அளவில் நடக்கவுள்ள கபடி போட்டிக்கு, இந்த அணி தேர்வாகியுள்ளது. செயின்ட் பீட்டர்ஸ் அணி ஹேண்ட் பாலில் முதலிடம் பள்ளிக்கல்வித் துறையின் வருவாய் மாவட்ட அளவிலான ஹேண்ட் பால் போட்டி, கீழ்ப்பாக்கத்தில் நேற்று நடந்தது. இதில் 14 வயது பிரிவில், புரசைவாக்கம் அனிதா மெதடிஸ்ட் பள்ளி அணி, அடையாறு ஸ்ரீ சங்கர பள்ளி, தேனாம்பேட்டை பி.எஸ்., மெட்ரிக் பள்ளி, முறையாக மூன்று இடங்களை பிடித்தன. அதேபோல் 17 வயது பிரிவில் ராயபுரம் செயின்ட் மேரீஸ் பள்ளி அணி, தேனாம்பேட்டை பி.எஸ்., பள்ளி, திருவொற்றியூர் சங்கரா வித்யா கேந்திரா பள்ளி, முதல் மூன்று இடங்களை கைப்பற்றின. 19 வயதில், ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி, அனிதா மெதடிஸ்ட் பள்ளி, அண்ணா நகர் மெஸ் ரசீனா பள்ளி, முதல் மூன்று இடங்களை பிடித்தன. முதலிடம் பெற்ற அணிகள், மாநில போட்டியில் விளையாடுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ