உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  எஸ்.ஆர்.எம்., மாணவியர் பேட்மின்டனில் அசத்தல்

 எஸ்.ஆர்.எம்., மாணவியர் பேட்மின்டனில் அசத்தல்

சென்னை: மாநிலங்களுக்கு இடையிலான தேசிய பேட்மின்டன் போட்டியில், தெலுங்கானா அணியில் பங்கேற்ற எஸ்.ஆர்.எம்., மாணவியர் தங்கம் வென்றனர். அருணாச்சல பிரதேசத்தில், மாநிலங்களுக்கு இடையிலான 48வது தேசிய பேட்மின்டன் போட்டி, நேற்று முன்தினம் துவங்கி, நேற்று மதியம் நிறைவடைந்தது. போட்டியில், டில்லி, சண்டிகர், தெலுங்கானா உட்பட எட்டு மாநில அணிகள் பங்கேற்றன. இதில், தெலுங்கானா அணி முதலிடத்தை கைப்பற்றி அசத்தியது. தெலுங்கானா அணியில் சென்னை, காட்டாங்கொளத்துர் எஸ்.ஆர்.எம்., மாணவியர்களான அல்லுாரி தன்வி ரெட்டி, 18, பிரஷான்சா போனம், 18, பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர். மாணவியரை பல்கலை நிர்வாகம் வெகுவாக பாராட்டியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ