உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஹாக்கியில் எஸ்.ஆர்.எம்., மாணவியர் முதலிடம்

ஹாக்கியில் எஸ்.ஆர்.எம்., மாணவியர் முதலிடம்

சென்னை : தென்னிந்திய அளவில் நடந்த ஹாக்கி போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை மகளிர் அணி சாம்பியன் கோப்பை வென்றது. 'யங் சேலஞ்சர்' ஹாக்கி கிளப் சார்பில், தென்னிந்திய அளவில் மகளிருக்கான ஹாக்கி போட்டி, சிவகங்கை மாவட்டத்தில், நடந்தது. இதில், பெங்களூரு ஹாக்கி அகாடமி, யங் சேலஞ்சர் ஹாக்கி கிளப் உட்பட தென்னிந்திய அளவில், 16 அணிகள் பங்கேற்றன. அரையிறுதி போட்டியில், எஸ்.ஆர்.எம்., அணி, யங் சேலஞ்சர் ஹாக்கி கிளப் அணியை 2 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில், திருவாரூர் மாவட்ட ஹாக்கி அகாடமி அணியை எதிர்கொண்ட எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை