உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தண்டவாளத்தில் தலைகொடுத்து தற்கொலை

தண்டவாளத்தில் தலைகொடுத்து தற்கொலை

பெரம்பூர், கொடுங்கையூரை சேர்ந்தவர் சுந்தர்,54. இவருக்கு மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று அதிகாலை 4:00 மணியளவில் வீட்டில் இருந்து கிளம்பிய இவர், பெரம்பூர் ரயில் நிலைய தண்டவாளத்தில் வந்து படுத்துள்ளார். ஆவடியில் இருந்த சென்னை வந்த மின்சார ரயில், சுந்தர் தலைமீது ஏறி இறங்கியதில், தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே சுந்தர் பலியானார்.முதற்கட்ட விசாரணையில் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவரை கடந்த டிச. 31ம் தேதியுடன் வேலை விட்டு நிறுத்தியுள்ளனர். இந்த மன உளைச்சலில் இருந்த இவர், தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து பெரம்பூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ