உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சூரிய, சந்திர பிரபையில் அருள்பாலித்த தாயார்

சூரிய, சந்திர பிரபையில் அருள்பாலித்த தாயார்

சென்னை, தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் ஒன்பது நாள் பிரம்மோற்சவம் நடக்கிறது. விழா, கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று காலை சூரிய பிரபை புறப்பாடு நடந்தது. மதியம் ஸ்நபன திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. இதைத்தொடர்ந்து, கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இரவு 7:00 மணிக்கு பத்மாவதி தாயார் சந்திர பிரபையில் அருள்பாலித்தார்.ஏற்பாடுகளை, திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக, புதுச்சேரி ஆலோசனைக் குழு தலைவர் சேகர் தலைமையில் செய்யப்பட்டிருந்தது. இன்று காலை ரத உற்சவமும், நாளை சக்ர ஸ்நானமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை