உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 48வது சுற்றுலா பொருட்காட்சி அமைச்சர் உதயநிதி துவக்கினார்

48வது சுற்றுலா பொருட்காட்சி அமைச்சர் உதயநிதி துவக்கினார்

சென்னை, சென்னை தீவுத்திடலில் 48வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை, அமைச்சர் உதயநிதி நேற்று துவக்கி வைத்தார்.மொத்தம் 70 நாட்கள் நடக்கும் இப்பொருட்காட்சியில் அரசு துறை அரங்குகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை அரங்குகள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள் என, நுாற்றுக்கணக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. விழாவை துவக்கி அமைச்சர் உதயநிதி பேசியதாவது:நான் பள்ளியில் பயிலும் போது, பலமுறை குடும்பத்துடன் இதுபோன்ற சுற்றுலா பொருட்காட்சிக்கு செல்வது வழக்கம். அதே பொருட்காட்சியை திறந்து வைப்பது எனக்கு பெருமை. அரசு துறையின் சிறப்பான திட்டங்கள் குறித்து, இந்த அரங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையின் அரங்கமும் இங்குள்ளது கூடுதல் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ