உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாரடைப்பால் டிரைவர் பலி தடுப்பில் மோதி நின்ற லாரி

மாரடைப்பால் டிரைவர் பலி தடுப்பில் மோதி நின்ற லாரி

புழல், திருப்பூரில் இருந்து சென்னைக்கு துணி பார்சல்களுடன், நேற்று முன்தினம் லாரி வந்தது. இதை, திருப்பூர் வேலம்பாளையம் சொர்ணாபூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார், 51, ஓட்டி வந்தார்.செங்குன்றம் அடுத்த காந்தி நகரில் உள்ள கிடங்கில் பார்சல்கள் இறக்கப்பட்டன. அதன் பின், உதவியாளர் ராஜுவுடன், செங்குன்றம் தேசிய நெடுஞ்சாலை வழியாக, மாதவரம் சென்று கொண்டிருந்தார்.புழல், காவாங்கரை சந்திப்பில், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால், கட்டுப்பாட்டை இழந்த லாரி, அங்குள்ள சாலை தடுப்பில் மோதி நின்றது. இது குறித்து, புழல் போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி