உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாகனத்தில் இருந்த பணம் திருட்டு

வாகனத்தில் இருந்த பணம் திருட்டு

ஆவடி, ஆவடி, நேரு பஜார் பகுதியைச் சேர்ந்தவர் மஹாவீர் சந்த், 62; அதே பகுதியில், 'எம்விக் சர்ஜிகல்' என்ற பெயரில், மருத்துவ உபகரணங்கள் விற்கும் கடை வைத்து உள்ளார்.நேற்று மதியம், 1:00 மணிக்கு, ஆவடி, புதிய ராணுவ சாலையில் உள்ள, இந்தியன் வங்கியில் 76,000 ரூபாய் பெற்றார். தன் 'ஸ்கூட்டி பெப்' ரக வாகனத்தின் கைப்பிடியில், பணப்பையை மாட்டிச்சென்றார்.வழியில், பழக்கடை அருகே வாகனத்தை நிறுத்தி, பொருட்கள் வாங்கி திரும்புவதற்குள் பணப்பை திருடுபோனது தெரிந்தது. அவரது புகாரை, ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ