உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புழல் கைதிக்கு கஞ்சா சப்ளை செய்தவர் கைது

புழல் கைதிக்கு கஞ்சா சப்ளை செய்தவர் கைது

புழல், சென்னை பெரும்பாக்கம், எழில் நகர் பகுதியை சேர்ந்த மகபுல் பாஷா, 25 என்பவர், புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று முன் தினம் மதியம், அவரை சந்திக்க அவரது கூட்டாளி காட்டுபாக்கம், கே.கே.நகர் பகுதியை சேர்ந்த அருண்குமார், 20 என்பவர் புழல் சிறைக்கு வந்தார். நேர்காணல் அறையில் மகபுல் பாஷாவை சந்தித்த அருண்குமார், கஞ்சாவை மறைத்து பந்து போல் சுற்றி கைமாற்ற முயன்றார். அது கீழே விழுந்து உருண்டு ஓடியது.அங்கு பணியில் இருந்த முதல்நிலை காவலர் பாலமுருகன் அருண்குமாரை மடக்கி பிடித்து, சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அருண்குமார் கொண்டு வந்த 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை போலீசார் கைது செய்தனர்.ர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை