உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வழிப்பறி திருடர்கள் சிக்கினர்

வழிப்பறி திருடர்கள் சிக்கினர்

செம்பியம்:புளியந்தோப்பு, சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் மாரிகுமார், 27; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, அதிகாலை 4:00 மணி அளவில், பெரம்பூர் எஸ்.எஸ்.வி., கோவில் தெரு வழியாக, வீட்டிற்கு நடந்து சென்றார்.அப்போது, அவரை வழி மறித்த இருவர், கல் மற்றும் கைகளால் அவரை தாக்கி, மொபைல்போனை பறிக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பியவர், செம்பியம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து விசாரித்த போலீசார், நேற்று காலை, பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலையைச் சேர்ந்த பழைய குற்றவாளி சந்தோஷ் ராஜ், 19, சஞ்சய், 18, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை