உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சுகாதார துறை வருகை பதிவேடு திருட்டு

சுகாதார துறை வருகை பதிவேடு திருட்டு

கானத்துார்:சோழிங்கநல்லுார் மண்டலம், 197வது வார்டு, உத்தண்டியில் வார்டு அலுவலகம் உள்ளது. இங்கு, சுகாதாரத்துறையின் கீழ், 10க்கும் மேற்பட்ட மலேரியா தடுப்பு ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.இவர்களுக்கு, வருகைப் பதிவேடு பராமரிக்கப்படுகிறது. நேற்று முன்தினம், அலுவலக நேரத்தில் இந்த வருகை பதிவேடு திருடப்பட்டு உள்ளது.தனிப்பட்ட விரோதத்தில், சிலரை சிக்க வைக்க, வருகை பதிவேட்டை திருடியதாக தெரியவருகிறது. கானத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ