உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருத்தணியில் அறைகளுக்கு ஆன்-லைன் முன்பதிவு இல்லை

திருத்தணியில் அறைகளுக்கு ஆன்-லைன் முன்பதிவு இல்லை

திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில், ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக உள்ளது.இந்த கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவர் முருக பெருமானை தரிசித்து செல்கின்றனர்.இரவில் தங்கும் பக்தர்கள் வசதிக்காக, கோவில் நிர்வாகம், குறைந்த வாடகையில் குடில்கள் மற்றும் அறைகளை அமைத்துள்ளது.இவற்றை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்வதற்காக, ஐந்து ஆண்டுகளுக்கு முன்வரை, 'ஆன்லைன்' வழி முன்பதிவு செய்யும் நடைமுறை இருந்தது.கொரோனா தொற்று காரணமாக, 2019ல் ஆன்லைன் முன்பதிவு நிறுத்தப்பட்டது. தற்போது வரை மீண்டும் செயல்பாட்டுக்கு வராததால், தனியார் விடுதிகளில், 600 ரூபாயில் இருந்து 3,000 ரூபாய் வரை அதிக கட்டணம் செலுத்தி, பக்தர்கள் தங்க வேண்டிய நிலை உள்ளது.பக்தர்கள் நலன்கருதி ஆன்-லைன் வழி முன்பதிவுக்கு, கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.திருத்தணி கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோவில் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள குடில்கள், அறைகளில் சீரமைப்பு பணி நடக்கிறது. தணிகை இல்லத்தில் குடில்கள் சீரமைத்து, பக்தர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. விரைவில், ஆன்லைன் முன்பதிவு துவங்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ