உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பங்க் ஊழியரை தாக்கியோர் கைது

பங்க் ஊழியரை தாக்கியோர் கைது

திருவொற்றியூர்: திருவொற்றியூர், மேற்கு மாடவீதியைச் சேர்ந்த கணபதி, 34. தெற்கு மாடவீதியில், பெட்ரோல் 'பங்க்' நடத்தி வருகிறார்.கடந்த, 5ம் தேதி காலை 'பங்க்'கிற்கு, டூ - வீலரில் வந்த மூன்று பேர், பெட்ரோல் நிரப்பிக் கொண்டு, பணம் தராமல் செல்ல முயன்றனர். ஊழியர்கள் பணத்தை கேட்டுள்ளனர். ஆத்திரமடைந்த கும்பல், ஊழியர்களை தாக்கினர்.கணபதியையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். விசாரித்த திருவொற்றியூர் போலீசார், திருவொற்றியூரைச் சேர்ந்த விக்னேஷ், 28, பிரதீப், 30, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை